Senior Citizen's Day
ஸ்ரீ
லலிதாம்பிகை அறக்கட்டளை நிகழ்த்தும் முதியோர்
நற்பணிகள்
மிக
விரைவில் உலகில் அதிகமான இளைஞர்கள் நிறைந்த நாடாகவும் அதே நேரம் ஆதரவற்ற முதியோர்
நிறைந்த நாடாகவும் உருவாக இருக்கின்றது நம் இந்தியா.
ஆதாரப்பூர்வமான தகவல் அடிப்படையில் நான்கு
முதியோரில் ஒருவர் மன நோய்க்கு ஆளானவராகவும், மூன்று முதியோரில் ஒருவர் நடக்க
இயலாதவராகவும், ஐந்து பேர்களில் ஒருவர் காது கேளாதவராகவும், மூன்றில் ஒருவர் இரத்த
அழுத்தம் உடையவராகவும், பெரும்பாலானோர் கண்பார்வைக்குறைபாடு உடையவராகவும்
இருக்கின்றனர். பத்து கோடியாக தற்போது இருக்கும் 60 வயதுக்கு மேலான முதியோர்களின்
எண்ணிக்கை இன்னும் பதினைந்தே வருடங்களில் 19 கோடியே 80 லட்சம் முதியோர்களாக
உயரக்கூடும்.இவர்களில் பாதிக்கு மேல் ஆதரவற்றோராக இருப்பர்.
முதியோர் இல்லங்கள் கட்டுதல், முதியோருக்கான
காப்பீடு மற்றும் வருமானம் ஏற்படுத்தித்தருதல், மருத்துவ உதவி வழங்குதல்,
முதியோருக்கான உரிமைகள் மற்றும் கடமைளை உணர்த்துதல், அன்பும், பரிவும், சேவை
மனபான்மையும் கொண்ட இளைஞர் அமைப்பினை உருவாக்குதல் ஆகிய நல்ல எண்ணங்களோடு,
இச்சமுதாயக்கடமையை முன்வைத்து ஆன்மிக குரு தவத்திரு.முனைவர்.ஸ்ரீ ஜகன்னாத சுவாமி
அவர்களின் சீரிய வழி காட்டுதலோடு உருவாகியுள்ளது ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளையின்
ஒரு பிரிவாகிய “ முதியோர் நலம் காக்கும் மையம்” .
1.
ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளை முதற்கட்டமாக
நல்வாழ்வுத் திட்டங்களை
உருவாக்கி வருகிறது.
2.
முதியோர் நல மையங்களை ஆங்காங்கே
உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
3.
ஆண்டு தோறும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதியோர்
தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தவும், மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம்
நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
4.
இலவச கண் கண்ணாடி, வாக்கிங்க்
ஸ்டிக், காதொலி கருவி போன்றவையும் வினியோகிக்கப்படும்.
5.
24 மணி நேர ஹெல்ப் லைன் மொபைல் சேவை
நடத்தப்படும்.
6.
முதியோருக்கான எளிய
வருமானங்களைத்தரும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல்.
7.
உடல் நலம், மனித உரிமைகள் மற்றும்
கடமைகள், தியானம், யோகா, கருத்தரங்கங்கள்.
8.
அன்பும், பாசமும் பரிமாறிக்கொள்ள
இணைய தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஏற்படுத்துதல்.
9.
முதியோர் சேவையில் ஆர்வம் உள்ள இளைஞர்களைக்கொண்டு
சேவைப்பயிற்சி, பண்புப் பயிற்சி, முதியோருக்கு ஆறுதல் தரும் களப்பணி போன்றவற்றை
செய்தல்.
10. உங்களை
நீங்கள் எப்படி இணைத்துக்கொள்ளலாம் ? :
உண்மையான சமுதாய அக்கறை உடைய பலரும்
இவ்வமைப்பில் இணைந்து கொண்டு தங்களால் இயன்ற பணி செய்ய முன்வருகின்றனர்.
உங்களை நீங்கள் ஒரு தன்னார்வ
சேவகராக இணைத்துக்கொள்ளலாம்.
குறைந்த பட்சமாக நாளொன்றுக்கு ரூ10/- வீதமாக
மாதம் ரூ.300/- என்ற
அளவில் நன்கொடைகள் வழங்கலாம்.
கண்கண்ணாடி, காதொலி கருவி,
ஊன்றுகோல் போன்றவை வழங்கலாம்.
முதியோர் மைய கட்டிடப்பணிக்கு
உதவாலாம்.
முதியோரை நேரில் சந்தித்துப்பேசி
ஆறுதல் தரலாம்.
வருக....துணை தருக.....
அன்புடன்,
தவத்திரு.முனைவர்.ஸ்ரீ ஜகன்னாத
சுவாமி
ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளை
5/109, பெரிய தடாகம், கோவை 641 108.
தொலை பேசி: 9363223298/ 9842244674.
இணயதளம்: www.srilalithambika.org
You can also remit your donations through :
Account
Name : SHRI LALITHAMBIGA TRUST
Savings Bank Account No: 15881450000341 BANK :
HDFC BANK LTD.
307, SREE GOKULAM TOWERS, 7
TH STREET, GANDHIPURAM, COIMBATORE - 641012,TAMILNADU, INDIA BRANCH CODE : 1588
RTGS / NEFT IFSC CODE :
HDFC0001588
SWIFT CODE : HDFCINBBCHE
Purpose
of transaction: Donation to Senior Citizens Project
ஸ்ரீ
லலிதாம்பிகை அறக்கட்டளை நிகழ்த்தும் முதியோர் தின விழா
சிறப்பு
நிகழ்ச்சிகள்
நாள்: 21.08.2014 வியாழக்கிழமை
இடம்: திவ்யோதயா ஹால், இரயில் நிலையம் எதிரில், கோவை-18
காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
முதியோர் கண் பரிசோதனை முகாம்
முதியோர் உடல் நல பரிசோதனை முகாம்
மாலை 5 மணி Centre for Ensuring Life
to Senior Citizens of India முதியோர் நல மையம் தொடக்க விழா
முதியோர்க்கு உதவும் இளைஞர்களின் அமைப்பு
“பாசக்கார பசங்க” தொடக்க விழா
முதியோர் ஹெல்ப் லைன் அறிவிப்பு
கண்கண்ணாடி வழங்குதல்
வாக்கிங் ஸ்டிக் வழங்குதல்
காது கேட்கும் கருவி வழங்குதல்
உடைகள் வழங்குதல்
இசை நிகழ்ச்சி / கலை நிகழ்ச்சிகள்
தன்னம்பிக்கை
மிக்க மூத்த சாதனையாளர்களை கௌரவித்தல்
மாலை 7 மணி சிறப்புரை / நிறைவு விழா.
1.
ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளை முதற்கட்டமாக
நல்வாழ்வுத் திட்டங்களை
உருவாக்கி வருகிறது.