கோவை ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் கோவில் பாலாலய பூஜை
கோவை, டிசம்பர் 16
ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் கோவில் கோவை பெரிய தடாகம் பகுதியில் அமைந்துள்ளது. கோவில் கட்டப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு புனர் கும்பாபிஷேகம் வரும் 2012 பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. முன்னதாக திருப்பணிகள் துவங்கவுள்ளதை முன்னிட்டு டிசம்பர் 21 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணியளவில் பாலாலய பூஜை நடைபெறுகின்றது. அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கண்ணாடியில் ஆவாகனம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடை சார்த்தப்படும். அதன் பிறகு கும்பாபிஷேக நாளன்றுதான் பக்தர்கள் அம்மனை தரிசிக்கலாம்.திருப்பணிகளை பூஜ்ய ஸ்ரீ ஜகன்னாத சுவாமிகள் தலைமையில் அறங்காவலர் குழு மேற்கொண்டு வருகிறது. திருப்பணிகளில் பங்கேற்க விரும்புவோர் அறங்காவலர் திருமதி. லீலாவதி சம்பத்குமார் அவர்களை 9994369995 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment