ஸ்ரீ வித்யா தியானப் பயிற்சி
ஆரம்ப நிலை முதல் ஐந்தாம் நிலை மூல மந்திர தீட்சை வரை பெற
சென்னையில் அரிய வாய்ப்பு
ஸ்ரீ வித்யா தியானம் என்பது எல்லாம் வல்ல அம்பிகையின் அருளுடன் செய்யப்படும் தவ யோகமாகும். இதனால் உடல் நலம், மன நலம் மற்றும் எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெற்று மகிழ்வுடன் வாழலாம்.
மாதம் ஒருமுறை, இரு நாள் பயிற்சியாக தொடர்ந்து மூன்று மாதங்களில் நிறைவு செய்யலாம்.
இப்பயிற்சியில் மூலாதாரம் முதல் சஹஸ்ராரம் வரை தியானிக்கும் முறைகள், பஞ்சபூத தியானம், நவகிரக தியானம், நோய் தீர்க்கும் ம்ருத்யுஞ்சய தியானம், செல்வ வளம் தரும் தனாகர்ஷண தியானம், பஞ்சத்சாக்ஷரி மூல மந்திர தியானம் மற்றும் ஸ்ரீ சக்ர, மகாமேரு தியானம், வழிபாடு, ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் ஆகியன கற்றுத்தரப்படுகின்றன. 14 வயதுக்கு மேற்பட்ட ஆர்வமும், பக்தியும் உடைய அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
ஸ்ரீ வித்யா உபாசனை மற்றும் குண்டலினி தவத்தில் 25 ஆண்டுகள் அனுபவம் உடையவரும், கோவை ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் திருக்கோவில் ஸ்தாபகருமான பூஜ்ய ஸ்ரீ ஜகன்னாத சுவாமிகளும், அவர்தம் வாழ்க்கைத்துணைவியார் ஸ்ரீமதி மாதா ராஜராஜேஸ்வரி அவர்களும் இப்பயிற்சி வகுப்புகளை நிகழ்த்துகின்றனர்.
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். பயிற்சிக்கான நன்கொடை ரூ2,400/ மட்டும். பயிற்சிக்கட்டணத்தை “SHRI LALITHAMBIKA TRUST” என்ற பெயரில் Cheque அல்லது DD யாக செலுத்தலாம்.
No comments:
Post a Comment